தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளும் சேர்ந்து நல்ல நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. ஜெயலலிதா மறைவு முதலே பல அதிரடி மாற்றங்களை அனுதினமும் சந்தித்து வருகிறது தமிழக அரசியல். ஓ.பி.எஸ் பிரிவு, சசிகலா கைது என ஆரம் பித்த சதுரங்க விளையாட்டு தற்போது இரு அணிகள் இணைப்பு, டி.டி.வி தினகரன் கைது என பரபரப்பை எட்டியுள்ளது. இதனிடையே தமிழக அரசியல் சூழ லில் இரு அணிகளும் நாடகம் தான் போடுகின்றன என விமர்சித்துள்ளார் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா. இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தையின் முதல் நடவடிக்கையாக இன்று அதிமுக அலுவலகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அகற்றப் பட்டன. இதுகுறித்து சசிகலா கூறுகையில்,' பன்னீர்செல்வம்- பழனிசாமி இடையே அதிகாரப் போட்டியே தற்போது நிலவுகிறது. இரு அணிகளும் நல்ல நாடகத்தை நடத்தி, அடிமட்ட உறுப்பினர்களை ஏமாற்றி வருகிறார்கள்' என விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்துக்கு கொள்கை சார்ந்த கட்சியே தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்