தாமிரபரணி நதியை காக்கும் நோக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாமிரபரணி நதியருகே இன்று போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்னன், உ.வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து நடந்த ஆர்பாட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிருந்தா காரத், 'கரையில் நிற்கும் காவல்துறை, நாம் தண்ணீருக்குள் இறங்குவதை விரும்பவில்லை. ஆனால் பெப்சியும் கோக்கும் தண்ணீரை எடுப்பதை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இங்கிருக்கும் அரசுகளுக்கும், மக்களுக்கு தண்ணீர் கிடைக்காததை பற்றிக் கவலையில்லை. விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காததைப் பற்றி கவலையில்லை. தமிழகத்தின் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல் தூரம் நடப்பதை பற்றிக் கவலையில்லை. இதுதான் மாநில, மத்திய அரசுகளின் லட்சணம், கொள்கை. நாட்டில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே கம்யூனிஸ்டுகள் அக்கறை காட்டி வருகின்றன. மோடி கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை எதிர்க்க கூடிய விதத்தில் இப்போராட்டத்தில் இறங்கியுள்ளோம். எதற்கெடுத்தாலும் 'மேக் இன் இந்தியா' என முழங்கும் மோடி, இங்குள்ள தண்ணீரை அமெரிக்க கம்பெனிகளுக்கு தாரை வார்த்து வருகிறார். இது தான் மேக் இன் இந்தியாவின் கொள்கையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்