தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். 64 அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இது குறித்து அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் அன்பரசன் கூறியதாவது:- தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் அரசு கவனத்தை ஈர்க்க ஜனவரி மாதம் முதல் பல்வேறு அறிக்கைகளை கொடுத்தோம்.மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பல்வேறு அமைப்புகளும் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. வேலை நிறுத்தததால் அரசு சேவைகள் நிச்சயம் பாதிக்கும். அரசு எங்களது கோரிக்கைகள் குறித்து இதுவரை செவி சாய்க்கவில்லை. 4 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.64 துறை களை சேர்ந்த தமிழக அரசு ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்