img
img

அ.தி.மு.க.வை மோடியிடம் அடகு வைத்து விட்டனர்: மு.க.ஸ்டாலின் பேச்சு
ஞாயிறு 23 ஏப்ரல் 2017 11:14:07

img

விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (25-ந்தேதி) அனைத்துக்கட்சிகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.இதையொட்டி மயிலாப் பூர் மாங்கொல்லையில் நேற்று முழு அடைப்பு போராட்ட விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மாநிலத்தில் இருக்கக் கூடிய இந்த ஆட்சியை பொருத்தவரைக்கும் விவசாயிகளைப் பற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தை பற்றி அவர்கள் கவ லைப்பட வில்லை. அவர்களுடைய கவலைகள் எல்லாம் இந்த ஆட்சியில் நாம் எப்படி ஒட்டிக்கொண்டு இருப்பது. முதலமைச்சர் பொறுப்புக்கு யார் வரு வது என்று அதிகாரத்துக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கக் கூடிய நிலையில்தான் இன்றைக்கு இருந்துகொண்டிருக்கிறது. ஓ.பி.எஸ். போய் இப்போது இ.பி.எஸ். முதல்- அமைச்சராக வந்திருக்கிறார். ஆனால் யார் வந்தாலும் சரி, அ.தி.மு.க.வை மோடியிடம் அடகு வைத்து விட்டனர். மத்தியில் இருக்கக் கூடிய பா.ஜனதா அரசுக்கு ஜால்ரா போடுவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம்? நியாயமாக அந்த தேர்தல் முறையாக நடந்திருந்தால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வேட் பாளர்தான் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருப்பார். தமிழ்நாட்டில் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு முதல்- அமைச்சராக இருந்திருக்கிறார். கேரள மாநிலத் தில் இப்போது பினராயி விஜயன் முதல்-அமைச்சராக இருக்கிறார்.இவர்கள் எல்லாம் முதல்- அமைச்சராக இருக்கின்ற நேரத்தில் மாநில அரசின் உரி மையை பெறுவதற்கு எப்படியெல்லாம் போராடுகிறார்கள் என்ற வரலாற்றை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கே இருக்கக் கூடிய மோடியினுடைய பினாமி ஆட்சி எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. விவசாயினுடைய வறட்சி நிவாரணத்துக்கு மாநில அரசு 39,565 கோடி ரூபாய் கேட்டார்கள். வர்தா புயல் நிவாரணத்துக்கு கேட்ட தொகை 22,579 கோடி ரூபாய். வெள்ள சேதத்துக்கு சிறப்பு நிதியாக 25,912 கோடி ரூபாய். ஒட்டுமொத்தமாக கூட்டிப் பார்த்தால், 88,050 கோடி ரூபாய். ஆனால், மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 2,016 கோடி ரூபாய். இதுதான் தமிழகத்தின் நிலை. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து அங்குள்ள விவசாயிகள் எல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அருகதை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்று அழுத்தம் தரக்கூடிய தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. தலைவர் கலைஞர் ஆட்சி பொறுப்பில் இருந்த நேரத்தில், இதே விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது திமுக ஆட்சி. 2006 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகள், திட்டங்கள் வாக்குறுதிகளாக வழங்கப்பட்டன. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று அறிவித்தார். முதல்-அமைச்சர்கள் பதவியேற்றதும் வழக்கமாக நேராக கோட்டைக்கு சென்று கோப்புகளை வரவழைத்து கையெழுத்திடுவார்கள், ஆனால், ஆட்சிக்கு வந்து, பதவி பிரமாணம் நேரு விளையாட்டரங்கத்தில் நடை பெற்றபோது, கலைஞர் கோட்டைக்கு செல்ல வில்லை, கோட்டையில் இருந்து கோப்புகளை விழா மேடைக்கு கொண்டு வர வைத்து கையெழுத்திட்டார். ரூ.7,000 கோடி விவசாய பெருங்குடி மக்களின் கடனை தள்ளுபடி செய்கிறேன்’, என்று சொன்னார். மத்திய அரசில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்தபோது, 60,000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்கு உந்து தலாக இருந் தவரே கலைஞர் தான். பல நிலைகளில், பல திட்டங்களை, பல சாதனைகளை விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ கத்துக்கும் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த போராட்டத்தை பார்த்தாவது மத்தியமாநில அரசுகள் பரிகாரம் காணுகிற முயற்சியில் ஈடுபடவில்லை என்று சொன்னால், அடுத்த கட்ட போராட்டத்தை ஒரு மிகப்பெரிய போராட்ட மாக, மக்கள் திரள் கொண்ட போராட்டமாக நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இன்றைக்கு தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கக் கூடிய மத்தியில் ஆளக்கூடிய இந்த ஆட்சிக்கு ஒரு சரியான பாடத்தை, ஒரு எச்சரிக்கை மணி அடிக்கக்கூடிய வகையில் இந்த போராட்டம் வெற்றிகரமான போராட்டமாக அமைவதற்கு நீங்கள் எல்லா வகையிலும் துணை நிற்க வேண்டும், துணை நிற்க வேண்டும். கூட்டத்துக்கு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் மயிலை த.வேலு வரவேற் றார். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த நிர்வாகி சவுந்தர்ராஜன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், சுப.வீர பாண்டியன், எர்ணாவூர் நாராயணன், பொன்குமார், பேரா யர் எஸ்றா.சற்குணம், கு.செல்லமுத்து, பஷீர்அகமது, இனிகோ இருதயராஜ், பி.எம்.அம்மாசி, துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img