img
img

விவசாயிகளை சந்தித்தார் முதல்வர்.... போராட்டம் முடிவுக்கு வருமா?
ஞாயிறு 23 ஏப்ரல் 2017 11:08:16

img

டெல்லியில் கடந்த 40 நாள்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சென்று சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலை மையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவா ரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுப்பட்டனர். மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்நிலையில் 41-வது நாளான இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜந்தர்மந்தரில் விவசாயிகளை நேரில் சந் தித்து, அவர்கள் அருகில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகள் சார்பில் முதல்வரிடம் பேசிய அய்யாக்கண்ணு, ”தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அண்மையில் உத்தரபிரதேசத்தில் கூட விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தனர்”, என்றார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர், “நதிகளை இணைக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்தார் அய்யாக்கண்ணு. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நிலத்தின் மூலம் ஓய்வூதியம் கிடைக்க வழிவகுக்கப்படும். பிர தமர் நரேந்திர மோடியை சந்தித்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவேன். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நிறை வேற்ற எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்வோம்”, என்றார். முதல்வர் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி எங்கள் கோரிக்கையை ஏற்றால் போராட்டத்தை கைவிடத் தயார் என்று திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டார் அய்யாக்கண்ணு. எனவே போராட்டம் மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img