’மருத்துவமனையில் ஜெயலலிதா - சசிகலா இடையே நடந்த உரையாடல் தொடர்பான ’வீடியோ’ வெளியானால் தற்கொலை செய்து கொள்வேன்’ என சிறை செல்லும் முன் சசிகலா கூறிய தகவல் வெளியாகி உள்ளது. ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர். பிளவுபட்ட அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான நிபந்தனையாகவும் இதை வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் தன் ’பேஸ்புக்’ பக்கத்தில் ஜெயலலிதாவும் - சசிகலாவும் பேசும் வீடியோ பதிவு இருப் பதாகவும் அது சசிகலா மீதுள்ள களங்கத்தை துடைக்கும் என்றும் கூறியிருந்தார். இதன் பின்னணி குறித்து, சசிகலா ஆதரவு எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது: ஜெயலலிதாவுக்காக தன் வாழ்க் கையை அர்ப்பணித்தவர் சசிகலா. அவர் மீது இப்படி அபாண்டமாக பழி விழுந்துள்ளது வருத்தம் தருகிறது. ஜெ. சிகிச்சை பெற்ற போது, அவரை சசிகலா எவ்வளவு கவனமாக பார்த்துக் கொண்டார் என்பதும், அவர்கள் இருவரிடம் இருந்த பாசமிக்க உறவும், அப் போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை பார்த்தால், உலகுக்கு புரியும். அந்த வீடியோ, என்றேனும் ஒரு நாள் வெளியாகும். ஆனால், அதை வெளியிடக் கூடாது என, சசிகலா கூறியுள்ளார். அதில், ஜெ., சிகிச்சை பெற்ற நிலை யில் எடுக்கப் பட்ட காட்சிகள் உள்ளன. அது, வெளி யில் தெரிந் தால், ஜெயலலிதாவுக்கென உள்ள அந்த கம்பீர, ’இமேஜ்’ தவிடு பொடியாகும்.மேலும், ஒரு பெண்ணை, அந்த உடையில், வெளியுலகம் பார்க்கக் கூடாது என்பதற்காகவும், அதை வெளியிடக் கூடாது என, சசிகலாகூறியுள்ளார். சிறைக்கு செல்வதற்கு முன் கூட, ’அது வெளியா னால் தற்கொலை செய்து கொள்வேன்’ என, திட்ட வட்டமாக கூறிச் சென்றார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஜெயானந்த் கூறியது என்ன? : ஜெயானந்த், ’பேஸ் புக்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: கொலைப்பழி சுமத்தியும் ஜெ., சிகிச்சை படத்தை வெளியிடவில்லை. பச்சை கவுன் உடையில் ஜெ. வை எதிரிகள் பார்க்கக் கூடாது என்பதே காரணம். சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூவுலகை ஆளுவதற்கு, ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், ஓ.பி.எஸ்., ஓட்டுக்காக, அவரை பிணப்பெட்டியில் வைத்து, ஓட்டு கேட்கிறார். உண்மை வலிமையானது. ஒரு நாள், ஜெய லலிதாவும், சசிகலாவும் ஆஸ்பத்திரியில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால்... பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்? அந்த நாள், மிக விரைவில். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்