பிரதமர் நரேந்திர மோடி டீ விற்பனை செய்த ரயில்வே ஸ்டேஷன், எட்டு கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட உள்ளது.குஜராத் மாநிலம், மேக்சானா மாவட்டத்தில் உள்ளது வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன். இங்குள்ள டீ கடையில், தன் சிறு வயதில் தந்தையுடன் டீ விற்பனை செய்து வந்ததாக, 2014 லோக் சபா தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி அடிக்கடி குறிப்பிட்டார். இந்த ரயில்வே ஸ்டேஷன் தற்போது மேம்படுத்தப்பட உள்ளதாக, ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்கா கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், '' இதற்காக, 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வாத்நகர் - மேக்சானா ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது. வாத்நகர் உள்ளிட்ட மூன்று பகுதிகளை, சுற்றுலா தலங்களாக தரம் உயர்த்த, 100 கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தான், வாத்நகர் ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத் தப்படுகிறது,'' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்