முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடித்தே கொல்லப்பட்டார்; அவரது கன்னத்தில் இருந்த காயங்களே இதற்கு சாட்சி என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தை யில் மும்முரமாக இருக்கின்றன. ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்; சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை கூண்டோடு நீக்க வேண்டும் என்பது ஓபிஎஸ் அணியினர் நிபந்தனைகள். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை எடப்பாடி கோஷ்டி அமைத்துள்ளது. இந்த நிலையில் தொலைக்காட்சிக்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன் சிறப்பு பேட்டியளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் மயங்கிய நிலையில்தான் கொண்டு செல்லப்பட்டார். அப்படி ஜெயலலிதா மயங்கிய நிலைக்கு செல்ல காரணம் போயஸ் கார்டனில் நடந்த சம்பவங்கள்தான். போயஸ் கார்டனில் ஸ்டாம் பேப்பரில் கையெழுத்துப் போட ஜெயலலிதா மறுத்தார். அதனால் அவர் தாக்கப்பட்டார். அப்படி அடித்த காரணத்தால் ஜெய லலிதா மயங்கினார். ஜெயலலிதா தாக்கப்பட்டதன் விளைவுதான் கன்னத்தில் இருக்கும் 4 காயங்கள். ஜெயலலிதா தாக்கப்பட்டதைக் நேரடியாகப் பார்த்த வேலை செய்த பணியாளர் இன்று வரை எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இவ்வாறு பொன்னையன் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்