இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விவகாரத்தில் சிக்கியுள்ள டி.டி.வி.தினகரன், டெல்லி காவல்துறையினரிடம் ஆஜராகக் கேட்டிருந்த அவகாசத்தை நிராகரித்துள்ளது, டெல்லி போலீஸ். அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்ததால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, டிடிவிதினகரன் பணம் கொடுத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந் திரசேகர் என்பவரை டெல்லி காவல்துறையினர் அண்மையில் கைதுசெய்தனர். இதையடுத்து, தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய் தனர். இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், வரும் 22-ம் தேதி டெல்லி குற் றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராக மூன்று நாள் அவகாசம் கேட்டிருந் தார் டி.டி.வி.தினகரன். இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் தினகரன் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்