நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பழவூர் தெற்கு ரதவீதியை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் சார்பில் வக்கீல் காந்திமதிநாதன் கடந்த மார்ச் மாதம் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், மகாபாரதம் பற்றி சில கருத்துகளை கூறினார். அவரது கருத்துகள் இந்துக்களை அவமதிப்பதாக உள்ளது. மகாபாரதம் பற்றி தவறான கருத்துகளை கூறியதால் நடிகர் கமல்ஹாசனுக்கு அபராதத்துடன் கூடிய அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட குற்றவியல் நீதிமன்றம் கமல்ஹாசன் மீதான புகார் மனுவை ஏற்றுக்கொண்டு உரிய விசாரணை நடத்தி பழவூர் போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இன்று மனு மீதான விசாரணை நடந்தபோது நடிகர் கமல்ஹாசன் ஆஜராக வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மே மாதம் 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யாத பழவூர் காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் விடுக்கவும் உத்தரவிட்டது. அறிக்கையை தாக்கல் செய்ய ஒருமாத காலம் அவகாசம் வழங்கிய நிலையில் அறிக்கையை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்