மொத்தம் ரூ.9000 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப் பட்டுள்ளார். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (ஐ.டி.பி.ஐ.) உள்ளிட்ட 18 பொது மற்றும் தனியார் துறை வங்கி களில் ரூ.9 ஆயிரம் கோடியை கடனாக வாங்கினார். ஆனால் அதை திருப்பிச் செலுத்தவில்லை. இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் வாங்கிய கடன் மூலம் வெளிநாட்டில் உள்ள தனது கிங்பிஷர் நிறுவன சொத்துகளில் முதலீடு செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் வங்கிகள் கூட்டமைப்பு அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ.யும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் தன் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை யின் போது சி.பி.ஐ. தெரிவித்தது. அதேநேரம் அவரை மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகும்படி 3 முறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் ஆஜராகவில்லை. இதனால், ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப் பித்தது. இதற்கிடையே, அமலாக்கத்துறை மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் விஜய் மல்லையாவின் சிறப்பு பாஸ்போர்ட்டை முடக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்தியா தரப்பில் வலுவான கோரிக்கையானது முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் ’இண்டர்போல்’ போலீ சின் உதவியை மத்திய அமலாக்கத்துறை நாடியது. விஜய் மல்லையாவை கைது செய்ய ’ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டது. இப்போது இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து போலீஸ் கைது செய்து உள்ளது.அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்