பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். இன்று அதிமுகவில் பெரும் மாற்றங்கள், போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்ப டுவதால் சென்னையின் முக்கிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவல கத்தை சுற்றியும், ஜெயலலிதா சமாதியிலும் திரளான அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்சியை விட்டு டி.டி.வி.தினகரனை வெளியேற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் எடுத்த முடிவை தொடர்ந்து, டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் நள்ளிரவு 12.50 மணி வரை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். தற்போதைய நிலையில், அ.தி.மு.க. 3 அணியாக உடைந்திருக்கிறது. எனவே, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான 8 பேரை தவிர, மேற்கொண்டு யார் யார்? இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஆட்சி தொடர வேண்டும் என்றால், 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் உள்ள எம்.எல். ஏ.க்களில் சிலர், டி.டி.வி.தினகரன் பக்கம் சென்றால், ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பது குறிப்பி டத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்