அ.தி.மு.க-வின் உள்கட்சிக் குழப்பத்தால், தமிழக அரசியல் களம் பரபரப்பான சூழலை எட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னையில் பணிபுரியும் அனைத்துக் காவலர்களும் காலை 6 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹா உத்தர விட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. நேற்று, தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். பிறகு, செய்தி யாளர்களை அமைச்சர்கள் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சி யை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று கூறினார். இதையடுத்து, அடையாறில் இருக்கும் தனது வீட்டில், டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இப்படி, அ.தி. மு.க-வில் உள்கட்சிக் குழப்பம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் கரண் சின்ஹா, சென்னையில் பணிபுரியும் காவ லர்கள் அனைவரும் காலை 6 பணிக்கு பணிக்கு வருமாறு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்