முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர். குறிப்பாக, இன்றும் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், "தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. தினகரன் குடும்பத்துக்கு இனி கட்சியில் இடம் கிடையாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார். தினகரன் குடும்பத்தின் தலையீடு, கட்சியிலும் ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது. ஒற்றுமையாகக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும். ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்டு, சிறப்பான ஆட்சியைத் தொடர்வோம். முதலமைச்சர் உள்பட, அனைத்து அமைச்சர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பர். சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்."தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளது . பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார்" என்று அமைச்சர் சி.வி சண்முகம் கூறினார். "அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார் கூறினார். அனைவரும் சேர்ந்து இரட்டை இலையை பெறுவோம்" என்று நடராஜன் கூறி னார்.'ஜெயலலிதா விருப்பத்தின்படி ஆட்சியை கொண்டு செல்வோம்' என்று வைத்திலிங்கம் கூறினார். 'கட்சியில் பிரிவு இருக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்" என்று அமைச்சர் மணிகண்டன் கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்