அடையாறில் இருக்கும் தனது வீட்டில், ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார், டி.டி.வி.தினகரன். அதில், கிட்டத்தட்ட ஆறு எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ வெற்றிவேல், கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'யாரெல்லாம் சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்தார்களோ, அவர்களெல்லாம் இப்போது பயத்தில் என்னென்னவோ செய்கிறார்கள்' என்று கூறியுள்ளார். மேலும், 'முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபடத் தயார் என்று தகவல் கொடுக்கிறார். உடனே, அமைச்சர்கள் கூட்டம் நடத்துகின்றனர். 30 அமைச்சர்கள் மட்டும் அ.தி.மு.க இல்லை. டி.டி.வி.தினகரனை எதிர்க்கும் அமைச்சர்கள், கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். முன்னர் செய்த தவறு களுக்குப் பயந்து இப்படி ஒரு திடீர் முடிவை எடுத்துள்ளனர். சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் பயப்படுகிறார்கள். அனைத்து உண்மைகளையும் சீக்கிரம் வெளிப்படுத்துவேன். நாளை தினகரன் தலைமையில் ராயப்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.' என்று தெரவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்