கோலாலம்பூர், ஏப். 19- கோடீஸ்வரர் டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் மூலமாக கிடைத்த 200 கோடி வெள்ளியைக் கொண்டு மே பேங்கிற்கும் ஆர்.எச்.பி. பேங்கிற்கும் கடனை திருப்பி செலுத்தியுள்ளது 1எம்டிபி நிறுவனம். கடந்த ஆண்டில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கிய 1எம்டிபி, மே பேங்கிற்கும் ஆர்எச்பி பேங்கிற்கும் கடனை செலுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. எனினும் கோடீஸ்வரர் அந்த கடனை திருப்பி செலுத்துவதற்கு 200 கோடி வெள்ளி கடனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இப்போது அந்த இரு வங்கிகளுக்கும் கடன் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது என்று 1 எம்டிபி நேற்று அறிவித்தது. கடனை திருப்பி செலுத்துவதற்கு அந்த இரு முன்னணி வங்கிகளும் நிர்ணயித்திருந்த காலக்கெடுவிற்கு முன்னதாகவே மார்ஸ்தான் இன்வெஸ்மெண்ட் என்.வி. மூலமாக பெறப்பட்ட 200 கோடி கடன் வசதியின் மூலம் அந்த பெருங் கடன் அடைக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக 1 எம்டிபி தெரிவித்தது. நிதியமைச்சின் 1 எம்டிபியின் துணை நிறுவனமான பவர் டேக் இன்வெஸ்பென் ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட்டில் தங்களின் பங்குரிமைக்கான 200 கோடி வெள்ளி முதலீட்டுக்கான சுயேச்சை மின் உற்பத்தி நிறுவனமான தஞ்சோங் எனர்ஜி ஹோல்டிங்ஸ் தனது பங்களிப்பின் மாற்று நடவடிக்கையாக இந்த கடனை திருப்பி செலுத்துவதற்குரிய ஏற்பாட்டை செய்திருந்தது. இந்த கடனை திருப்பி செலுத்தும் நடவடிக்கையானது மிக முக்கியமான ஒன்றாகும். காரணம், இதன் மூலம் 1 எம்டிபி பெற்றிருந்த கடன் குறைக்கப்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடந்த 2014 நவம்பர் 30ஆம் தேதிக்குள் அக்கடனை 1எம்டிபி திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதனால் இயலாமல் போனதால் கடனை செலுத்துவதற்கான காலக்கெடு 2014 டிசம்பர் 36ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பின்னர் 2015 ஜனவரி 30ஆம் தேதி வரை மேலும் நீடிக்கப்பட்டது. அப்போதுகூட அத் தொகையை 1எம்டிபியினால் திருப்பி செலுத்த இயலவில்லை என்று த எட்ச் பைனான்ஷியல் டெய்லி பத்திரிகை கூறியது. மூன்றாவது முறையாக காலக்கெடுவை நீட்டிக்கும்படி 1 எம்டிபி செய்துகொண்ட விண்ணப்பத்தை அவ்விரு வங்கிகளும் நிராகரித்தன. அதன் பின்னரே, டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தலையிட்டு அக்கடனை செலுத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்