ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனி சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். இதன் பிறகு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். பன்னீர்செல்வம் அணியில் தற்போது 12 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மேலும், 10 எம்.பி-க்களும் பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். குறிப்பாக, அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன் உள்பட முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட பலர் அவரது அணியில் உள்ளனர். அதேபோல், தியாகு, பாத்திமா பாபு , நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பலர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். இந்நிலையில், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி ஆகியோர் பன்னீர்செல்வம் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரன் அணி மீதான நம்பிக்கையை இழந்ததால் அவர்கள் இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்