இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், இடைத்தரகர் என்று கைதுசெய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்தர் என்பவரிடம், காவல்துறை தீவிரமாக விசாரணை மேற் கொண்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந் துள்ளது. மேலும், சுகேஷ் தங்கி இருந்த ஹோட்டல் அறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் கைப்பற்றியதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவரின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை ஆய்வுசெய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில் தினகரன், சுகேஷுடன் பேசிய ஆடியோ கிடைத்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையிலான டெல்லி போலீஸ் நாளை சென்னை வருகிறது. இதற்கிடையில், 'டெல்லியில் கைதுசெய்யப்பட்ட நபர் யாரென்றே தெரியாது' என்று தினகரன் கூறிவருகிறார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்