img
img

சசிகலா நம்பும் நபர்கள் இவர்கள்தாம்!
திங்கள் 17 ஏப்ரல் 2017 15:59:09

img

சசிகலாவும் டி.டி.வி.தினகரனும் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கையில்லாதவர்கள்' என்று கூறிய பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்பி., கேசி பழனிச்சாமி, புரோக்கர்கள் மூலமாகவே எதையும் சாதித்துவிட முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார். டெல்லியில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் இன்று அளித்த பேட்டியில், "இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த சசிகலாவும் தின கரனும், மிகப்பெரிய தலைகுனிவை தமிழகத்துக்கு ஏற்படுத்தியுள்ளனர். இந்திய ஜனநாயக நடைமுறைக்கே மிகப்பெரிய சவாலை இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின்போது அனைத்து வாக்காளர்களுக்கும் பணப்பட்டுவாடாசெய்து, அதன்மூலமாக வெற்றிபெற வேண்டும் என முயற்சி செய்தார்கள். இன்றைக்கு, தேர்தல் ஆணையத்தின் மீதே பழி சுமத்துகிற வகையில் அவர்களது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சசிகலா குடும்பத்தைப் பற்றி அறிந்த அ.தி.மு.க-வினருக்கு நன்கு தெரியும். அந்தக் குடும்பத்தினரால் இந்தக் கட்சிக்கும் தமிழ்நாட்டுக்கும் களங்கம் ஏற் பட்டுள்ளது. இதுதான் அவர்களது இயங்கும் விதம். அவர்கள் எந்த விஷயத்தைச் செய்தாலும் நேர்மையற்ற முறையிலேயே செய்வார்கள் என்பது மீண் டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. நிச்சயமாக, புலன் விசாரணை செய்யக்கூடிய அதிகாரிகளும், விஜிலென்ஸ் அதிகாரிகளும், தேர்தல் ஆணை யமும் சசிகலா, தினகரன் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இப்பாேதாவது அவர்களை நம்பிக்கொண்டிருக்கிற, மீதியிருக்கிற அ.தி. மு.க-வைச் சார்ந்தவர்கள், அவர்களோடு தொடர்ந்து இருப்பது களங்கத்தை உண்டாக்கும். அவர்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சசிகலாவும் டி.டி.வி.தினகரனும் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கையில்லாதவர்கள். மக்கள் மீதும், அ.தி.மு.க தொண்டர்கள் மீதும் நம்பிக்கை யில்லாதவர்கள். புரோக்கர்கள் மூலமாகவே எதையும் சாதித்துவிட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நிச்சயமாக தமிழக மக்களும், அ.தி.மு.க தொண்டர்களும் அவர்களுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிப்பார்கள்" என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img