டெல்லியில் 35-வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டத்தில், மாடுகள் போன்று வைக்கோல் தின்னும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்க்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுப்பட்டு வரு கின்றனர். எலிக் கறி, பாம்புக் கறி உண்ணும் போராட்டம் தொடங்கி நிர்வாணப் போராட்டம் வரை நடத்திவிட்டனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து சந்திக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் 35-வது நாளான இன்று, தமிழக விவசாயிகள் மாடுகளைப் போன்று வாயில் வைக்கோல் வைத்து, சாலையில் மாடு போல் நடித்து நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்