தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ ரீதியாக சில உதவிகளை ரத்த உறவுகள் செய்ய மறுத்துவருவதால் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் அண்மையில் வழக்கமான மருத்துவ பரிசோத னைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை பல நாட்களாக நீடித்தது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். ஒருநாள் மட்டுமே விஜயகாந்த் பிரசாரம் செய்த நிலையில் இடைத்தேர்தலே ஆர்கே நகரில் ரத்து செய்யப்பட்டது.இந்த அறிவிப்புக்குப் பின்னர் மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற் போது விஜயகாந்தின் ரத்த உறவுகளிடம் மருத்துவ ரீதியாக சில உதவிகளை பிரேமலதா உள்ளிட்டோர் கேட்டிருந்தனராம். ஆனால் விஜயகாந்த் செல்வாக்குடன் இருந்த காலத்தில் எங்கள் பக்கமே எட்டிப்பார்க்கவிடமால் வைத்திருந்துவிட்டு இப்போது வந்து வாசல் கதவை தட்டு வதா? என கோபத்தில் இருக்கின்றனராம் ரத்த உறவுகள். இதில் கலங்கிப் போனதாம் விஜயகாந்த் குடும்பம். இருப்பினும் விடா முயற்சியாக ரத்த உறவுகளின் ஒத்துழைப்பைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறதாம் விஜயகாந்த் குடும்பம். இதனைத் தொடர்ந்து வெளிநாடு ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்கின்றன தேமுதிக வட்டாரங்கள்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்