சென்னை: விவசாயிகள் நலனை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் பிரச்சினைக்காக பிரதமர் மோடியை சந்திக்கவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி நடத்தப்பட்டது. கூட்டத்தில் திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்த ரசன், ஜி.ராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், தனபாலன், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அனைத்து கட்சி கூட்டத்தில் விவ சாயிகள் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. * காவிரி டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலாமாக அறிவிக்க வேண்டும் * பக்கத்து மாநிலங்கள் தடுப்பணைகள் கட்டுவதை தடை செய்ய தீர்மானம் * நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் உடனே ஒப்புதல் தர வேண்டும் * மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழகத்தில் கைவிடப்பட வேண்டும் * குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் * முல்லை பெரியாறில் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்த உடனே நடவடிக்கை தேவை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற் கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தை அரசு காக்க வேண்டும் என்றும், நெல் கரும்புக்கு நியாய விலை வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கரும்புக்கான நிலுவை தொகையை உடனே அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஸ்டாலின் முழு மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்