தி.மு.க தலைமையில் சென்னையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். மார்க்சிஸ்ட், இந்திய கம் யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்து உள்ளன. பா.ம.க நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து தி.மு.க நிர்வாகிகள் நேரில் அழைப்பு விடுத் தனர். பி.ஜே.பி-க்கு அழைப்பு விடுக்கவில்லை என்று தி.மு.க வெளிப்படையாக கூறி இருந்தது. அதற்கு பி.ஜே.பி மாநில தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார். ஒடிசா செல்லும் வழியில் , சென்னை விமான நிலையத்தில் தமிழிசை கூறுகையில், ''தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்துக்கான அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த தி.மு.க-வுக்கு தார்மீக உரிமை இல்லை. விவசாயிகள் இவ்வளவு பிரச்னைகளை சந்திக் கிறார்கள் என்றால் தமிழகத்தில் அதிக நாட்கள் ஆண்ட தி.மு.க.வும், அ.தி.மு.க-வும் தான் காரணம். தொலைநோக்கு திட்டம் இல்லாமல் விவசாயாத்தை சாகடித்து விட்டனர். இவர்களின் 50 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு குட்டிச்சுவராகி விட்டது. குறுகிய கண்ணோட்ட அரசியலால் தமிழக தாழ்ந்து போய் விட்டது. நதிகளை இணைக்கவில்லை. ஆறுகளை தூர் வாரவில்லை. குளம், குட்டைகளை பேணி பாதுகாக்கவில்லை'' என்று கூறினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்