தனது அண்ணன் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம் அடைந்ததையடுத்து, இவரது இறுதிச்சடங்கில் சசிகலா கலந்து கொள் வார் என்று கூறப்படுகிறது. சிறையில் இருந்து பரோலில் வருவதற்கான ஏற்பாடுகளை சசிகலா தரப்பினர் செய்து வருகின்றனர். அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா. இவரது அண்ணன் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன். இவர் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள திருவிடையூர் கோயிலுக்கு மகாதேவன் சென்றுள்ளார். அப்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போகும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகாதேவன் மீது சசிகலாவுக்கு மிகுந்த அன்பு உண்டு. அவரது இறப்பு குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடனடியாக தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம், பரோலில் செல்வதற்கான நடைமுறைகளை சசிகலா கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அப் போது, சசிகலாவை பரோலில் விடுவது குறித்து சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிகிறது. இதனிடையே, மகாதேவன் மரணம் குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், தாய்மாமனுமான டி.டி. வி.தினகரன் தஞ்சாவூர் செல்கிறார். மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு டி.டி.வி.தினகரன் அஞ்சலி செலுத்த உள்ளார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மகாதேவனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகளும் படித்து வருகிறார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்