ஜம்மூ காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை தாக்கிய சம்பவத்துக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மூ காஷ்மீர் மாநிலத் தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களை காஷ்மீர் இளைஞர்கள் சிலர் தாக்கி அழைத்துச் செல்வது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் குறித்து காஷ்மீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது, அந்தச் செயலுக்கு நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், 'என் நாட்டு ராணுவ வீரர்களை தாக்கிய சம்பவம் அவமானத்துக்குரியது. வன்முறையில் ஈடுபடாமல் இருப்பதே வீரத்தின் உச்சம். பாதுகாப்புப் படை வீரர்கள் முன்னு தாரணமாக உள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்