கத்திபாரா மேம்பாலத்தில் போராட்டம் நடத்திய இயக்குநர் கௌதமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறி யுள்ளார். போராட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என விசாரிக்கவேண்டும் எனவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பலர் தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட தொடங் கியுள்ளனர். தஞ்சையில் தொடர்ந்து 18 நாட்களாக ஆட்சியரகம் முற்றுகை போராட்டம் நடந்து வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு சிறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று இயக்குநர் கௌதமன் மற்றும் சிலர் சென்னை கத்திபாரா மேம்பாலத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த இவர்கள் போராட்டத்தை, காவல்துறையினர் கைதுசெய்து கலைத்தனர். இந்நிலை யில், கௌதமனின் போராட்டம் குறித்து எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 'கௌதமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மேலும், அவருக்கு எங்கிருந்து நிதி வருகிறது எனவும் விசா ரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என அவர் கூறியுள்ளார். தமிழகத்தின் நலனுக்காக போராடி வருபவர்களில் சிலரை தேச விரோதிகள் என கூறி வரும் எச்.ராஜா, சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவரை 'தேச விரோதி' என கூறும் காட்சிகள் வெளிவந்தன. இந்நிலையில், கௌதமன் பற்றிய கருத்தால், எச்.ராஜா மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்