பெங்களூரூவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வீட்டிலிருந்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத நோட்டுகளை பெங்களூரூ போலீஸார் கைப்பற்றி யுள்ளனர்.பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னர் கறுப்புப் பண ஒழிப்பில் அரசு தீவிரம் காட்டிவருகிறது. இன்று இரண்டாம் கட்ட கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. 60,000 பேரிடம் சோதனையும், விசாரணையும் செய்யப்படும் என முன்னரே வருமான வரித்துறையினர் அறிவித்திருந்த னர். இந்த நேரத்தில் பெங்களூரூ போலீஸார் நடத்திய சோதனையில் செல்லாத கறுப்புப் பணம் கைபற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்று வந்த சோதனையில் பெங்களூரூவைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் வி.நாகராஜ் என்பவரது வீட்டில் சோதனை நடத்தப் பட்டது. இதையடுத்து, மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் 40 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவரது வீட்டில் கோடிக்கணக்கான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்