மிகவும் பரபரப்பை அடைந்திருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த தேர்தல் ரத்து. விஜயபாஸ்கர் வீடு, சரத்குமார் வீடு என ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களின் வீடு அலுவலகங்கள் என வருமான வரித்துறையினர் 35-க்கும் மேற் பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழக முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு எதிரான ஆவணங்களும் இதில் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜய பாஸ்கரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். நடிகர் சரத்குமாரிடம் நள்ளிரவு வரை விசாரணை தொடர்ந்தது. இந்த விசாரணைகளில் பணப்பட்டுவாடா உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், இதனால் முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் இதில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விஜயபாஸ்கர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனையடுத்து இப்போது தமிழகத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழக ஆட்சி கலையும் வாய்ப்பும் இருப்பதாக அர சியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக ஆட்சியை கலைக்க மத்திய அரசு ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டதாகவும், ஆளும் கட்சியில் 10 முதல் 16 அமைச்சர்கள் கைது செய்யப்படலாம் எனவும் செய்திகள் உலவுகின்றன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்