டெல்லியில் 64-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டன. இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறி வித்தது. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது 'ஜோக்கர்’ படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ் செயனுக்கு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ’தர்மதுரை’ படத்தில் வரும், ’எந்தப் பக்கம்’ என்னும் பாடலுக்காக பாடலாசிரியர் வைர முத்துவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். ”ஏழாவது முறையாக தேசிய விருது கிடைத்தது தமிழுக்கு கிடைத்த பெருமை. எனக்கு விருது கிடைத்ததில் பெருமை மொழிக்குத்தான். நான் வெறும் கருவிதான். நான் தர்மதுரை படத்தில் எழுதிய ’எந்தப் பக்கம்’ என்னும் பாடல் தற்கொலைக்கு எதிரானது. 'தர்மதுரை' படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி” என்று வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்