ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் டி.டி.வி.தினகரனும் நேற்று தேர்தல் பிரசாரம் செய்ய வந்தனர். அதனால், இரு அணியைச் சேர்ந்தவர்களும் தங்களது பலத்தைக் காட்ட, ஆட்களைத் திரட்டி வைத்திருந்தனர். ஒரு பிரசார வேனில் ஜெயலலிதா பேச்சுகள் ஒளி பரப்பு ஆகிக்கொண்டு இருந்தது. டி.டி.வி.தினகரன் பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் நின்றபோது, அவரை ஆதரித்து ஜெயலலிதா பேசிய பேச்சுக் களை போட்டு, வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தனர். இந்தப் பிரசார வேனுக்கு எதிரே, சாலை ஓரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணி சிறிய மேடை ஒன்று அமைத்து, குத்துப்பாட்டு டான்ஸ் நடத்திக்கொண்டிருந் தனர். இந்தக் களேபரங்களுக்கு இடையே அந்தச் சாலை, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. இரு தரப்பினரும் செய்த தேர்தல் பிர சாரத்தில், ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொண்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன் அணியிலிருந்து கற்களும் தண்ணீர் பாக்கெட்டுகளும் ஓ.பன்னீர் செல்வம் ஆட்கள் மீது விசப்பட்டன. இதையடுத்து, இரண்டு தரப்பிலும் ஆவேசம் பொங்க ஒருவரை ஒருவர் அடிக்கப் பாய்ந்தனர். டி.டி.வி.தினகரன் ஆட்கள், இரும்பு ராடுகளை எடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆட்களை விரட்டி விரட்டி அடித்தனர். சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. பிரச்னையை அறிந்த துணை கமிஷனர் ராமர், சம்பவ இடத்துக்கு வந்து அமைதிப்படுத்தினார். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் காயம் ஏற்பட்டதாகக் கூறி டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த ஆறு பேர் ஸ்டான்லி மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டனர். அவர்களைப் பார்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். மேலும், டி.டி.வி.தினகரன் ஆட்கள் 'ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரவில் அரை மணி நேரம் ஆர்பாட்டம் செய்தனர். அவர்களை போலீஸார் மிரட்டி விரட்டினர். இந்நிலையில், ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதாக, ஓ.பன்னீர்செல்வம் சார்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜேஷ் லக்கானியிடம் அளித்துள்ள புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்