img
img

”தென்இந்தியக் கறுப்பர்களுடன் நாங்கள் வாழவில்லையா?”- தருண் விஜய் சர்ச்சை பேச்சு
வெள்ளி 07 ஏப்ரல் 2017 17:33:45

img

பாஜக மூத்த எம்.பி.யும் இந்திய-ஆப்ரிக்க நட்புறவு குழுத் தலைவராக இருப்பவர் தருண் விஜய். தமிழர், தமிழ் எனப் பல கட்டங்களிலும் உணர்ச்சிப் பொங்க ஆதரவும், அறிக்கைகளும் கொடுத்து வந்தவர். தற்போது தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என தென் இந்தியக் கறுப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா என்று சர்ச்சைக்குரிய இனவாதக் கருத்தினை முன்வைத்து பேசியுள்ளார். மேலும், நாங்கள் இனவாதிகள் என்று குறிப்பிடுவது சரியல்ல. கிருஷ்ணர் என்ற கறுப்பு நிறக் கடவுளை வணங்குகிறோம். ஆப்ரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்த பலர் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர்" என்று கூறியிருந்தார். இவ்வளவு காலம் இந்தியர்கள், தமிழர்கள், தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் என உணர்ச்சிப் பொங்க பேசிவந்த தருண் விஜய், தென் இந்தியர்களை கறுப்பர்கள் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தன் ட்விட்டர் பதிவில் மன்னிப்புக் கோரியுள்ளார் தருண் விஜய். "தான் சொல்ல வந்த கருத்து சரியாக வெளிப்படவில்லை என்றும் அதற்காக வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். தருண் விஜய் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ, ‘தருண் விஜயின் கருத்து அர்த்தமற்றது. எங்கிருந்து வந்தது இந்த நிறம். தருண் விஜயிடம் இருந்து இப்படி ஒரு கருத்தா என ஆச்சர்யப் பட்டுள்ளார். திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் குறிப்பிடுகையில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் எல்லாரும் கறுப்பர்கள் இல்லை. எங்கள் தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் நல்ல நிறமானவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img