சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை பன்னீர்செல்வமும், வாசனும் கூட்டாக சந் தித்தனர். அப்போது பேசிய வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கருத்தை ஏற்று தற்போது பன்னீர்செல்வம் அணிக்கு, ஆர்.கே.நகர் இடைத்தேர் தலில் ஆதரவளிக்க முடிவு செய்ததாக குறிப்பிட்டார். முன்னதாக வாசனை சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவளிக்க பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத் தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசிய வாசன், மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். மதுசூதுனனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள் என்றார். மேலும் வரும் 8-ம் தேதி ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து மதுசூதனனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் தாம் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் வாசன் அறிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்ணி தொடரும் என்றார். பின்னர் பேசிய பன்னீர்செல்வம், இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார். தினகரன் தரப்பினர் வாக்காளர் களுக்கு பணம் வழங்கி வருகின்றனர். இதனை தடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்