ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்துள்ளன. ஆர்.கே.நகரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 20 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக்கூறி அ.தி.மு.க அம்மா கட்சியினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி டிராபிக் ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையிட்டார். அப் போது, வழக்காக தொடர டிராபிக் ராமசாமிக்கு அனுமதி அளித்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகமாக நடைபெறுகிறது. இதனால் இந்த இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்