டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு நல சங்க நிர்வாகிகளை ராயபுரத்தில் இன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். நான் சென்னை மேயராக இருந்தபோது அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, குப்பைகளை அகற்றுவது, போக்குவரத்து நெரி சலுக்கு தீர்வு காண்பது என மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டோம். சென்னையில் 10 மேம்பாலங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் கட்டப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மேம்பாலம் கூட கட்டப்படவில்லை. அ.திமு.க. இப்போது 2 அணியாக இருந்தாலும் ஆட்சியில் உள்ளவர்கள் இந்த பகுதிக்கு எதுவும் செய்யவில்லை. ஆர்.கே.நகர் தொகுதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியாகும். இந்த தொகுதி எம்.பி.யும், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்தான். இங்கு 7 கவுன்சிலர்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் என்ன செய்து விட்டார்கள். சிந்தித்து பாருங்கள். மற்ற தொகுதியை விட ஆர்.கே.நகர் தொகுதி மிக மோசமாக உள்ளது. குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. ஆயில் கலக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொகுதி மக்களுக்காக சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறுகிறார்கள். சசிகலா தரப்பினர் நடந்த சம்பவங்களை முழுமையாக சொல்லாமல் மறைக்கப் பார்க்கிறார்கள். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், சுகாதாரதுறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரும் எதுவும் வாய் திறக்கவில்லை. இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலில் இரு அணிகளும் கபட நாடகம் ஆடுகின்றனர். டெல்லி தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டாலும், இங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் டி.டி.வி.தினகரனின் பெரா அணிக்கு கைக்கூலியாக செயல்படுகின்றனர். நேற்று 1 நாள் மட்டும் ரூ.10 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது. பணப்பட்டுவாடா செய்தவர்களை பிடித்து கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. டி.டி.வி.தினகரன் அணிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்