ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அங்கு வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. அதை தடுத்து நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அதன் பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் 2 பிரிவுகளும், தி.மு.க.வும் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். வேறு வேறு விதமாக அங்கு பணப்பட்டு வாடா நடைபெறுகிறது. பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. அதிக அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும் அங்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி கொள்ள நினைக் கிறார் கள்.வீடுகளில் அடையாள குறியிட்டு தேர்தல் முடிந்ததும் குலுக்கல் முறையில் வீடு தருவதாக கூறி வாக்கு கேட்கிறார்கள். இது ஒரு அபாயகரமான வாக்குறுதி. பணப்பட்டுவாடா செய்ததாக டி.டி.வி தினகரனின் அ.தி.மு.க அம்மா கட்சியை சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் பிடிபட்டிருக்கிறார் கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்திய தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நம்பிக்கைக்குரிய தேர்த லாக நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் அதிக அளவில் நியமிக்கப்பட்டாலும் பணப்பட்டு வாடா நடந்து கொண்டு தான் இருக்கிறது. பணப்பட்டுவாடா செய்வதை நாங்கள் ஆதார பூர்வமாக தேர்தல் கமிஷனிடம் புகாராக கொடுத்துள்ளோம். தேர்தல் நேர்மையான முறையில் நடக்க வேண்டும்.பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்கவேண்டும் அதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன், கே.பி. முனுசாமி ஆகியோர் சந்தித்தனர். அப்போது ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்