சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இந்திரா பானர்ஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் உயர திகாரிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் 2-வது பெண் நீதிபதி இந் திரா பானர்ஜி ஆவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜய்கிஷன் கவுல் உள்பட 5 மாநில தலைமை நீதிபதிகள் கடந்த மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர். இதனையடுத்து தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் கவனித்துவந்தார். பின்னர் கடந்த சில நாட் களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். நீதிபதி இந்திரா பானர்ஜி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1957-ம் ஆண்டு பிறந்த இவர், 1985 ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கறிஞர் தொழிலை துவங்கினார். 2002ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பின் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்