தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் ஆர்.கே.நகர் பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர், படகில் சென்று கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் வாக்கு சேகரித்தனர். ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து, ஆர்.கே.நகர்த் தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில், தி.மு.க, அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை, பா.ஜ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. களத்தில் நிற்கும் வேட்பாளர்கள், அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், நடைப்பயணமாக வாக்கு சேக ரித்து வருகிறார். இதுவரை அவர், வாகனப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. டி.டி.வி.தினகரன் மற்றும் மதுசூதனன், தீபா ஆகியோர் வாகனங்களில் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், கடலில் இறங்கி மீனவர்களிடம் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநில மீனவரணித் தலை வர் சத்தீஷ்குமார், துணைத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் தாமோதரன், சங்கர் ஆகியோரின் ஏற்பாட்டில், மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், வேட்பாளர் கங்கை அமரன் ஆகியோர் படகில் கடலுக்குச் சென்று, மீனவர்களிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது, மீன் பிடித்துக் கொண்டு கரைக்குத் திருப்பியவர்கள் மற்றும் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களிடம், கட்சியினர் வாக்கு சேகரித்தனர். இரண்டு மணி நேரம் கடலில் வாக்கு சேகரித்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்