சர்வதேச செம்மர கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள மாடல் அழகியும் விமானப் பணி பெண்ணுமான சங்கீதாவை காவலில் எடுத்து விசாரிக்க சித்தூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சங்கீதா பிரபல கடத்தல் மன்னன் லக்ஷ்மனனின் 2-வது மனைவி ஆவார். இவர் மீது பல்வேறு கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஓராண்டாக தேடி வந்த சங்கீதாவை கொல்கத்தாவில் வைத்து சித்தூர் போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் சங்கீதாவை, போலீ சார் சித்தூர் சிறையில் அடைத்துள்ளனர். சங்கீதாவை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்மிட்டுள்ளனர். விசாரணையின்போது சர்வதேச அளவில் செம்மர கடத்தலில் ஈடுபட்டு வருவோரின் விவரங்கள் வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுடுகிறது. இவருடைய கணவன் லக்ஷ்மன், செம்மர கடத்தல் வழக்கில் 2015ல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்