இலங்கை தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்து இனவாதப் போரை நடத்திய இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு மிகவும் வேண்டியவரின் வீட்டில் நடத்தப்படும் விருந்தோம்பலில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். ரஜினி மேற்கொள்ளவிருக்கும் இலங்கைப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த விருந்தோம்பலிலும் கலந்துகொள்வதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த விருந் தோம் பலில் ராஜபக்சேவும் கலந்து கொள்ளவிருப்பதாக தெரியவந்துள்ளது. ராஜபக்சேவின் குடும்ப நண்பரான லைகா நிறுவனம் சார்பில் ஈழத் தமிழர் களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் வாழும் தமிழர் களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார் என்கிற செய்திக்குறிப்பு லைகா நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஊடகங்களுக்குச் சொல்லப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கார் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை இலண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. தமிழ் மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேச வேண்டிய நேரத்தில், அதை திசை திருப்பும் உத்தி யாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிங்கள அரசுக்கு துணை போகும் பிஜேபியின் அனுமதியோடு இவ்வறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை. ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளி வெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளி விடுவது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. லைகா நிறுவனத்துக்கும், மிகப் பெரும் செலவில் தயாரிக்கப் படுகிற அந்தப் படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன் படுத்திக் கொள்ள எண்ணுகிறது. சிங்கள அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த எவ்வித நியாயமு மின்றி உறவுகள், உடைமைகள் மட்டுமின்றி உரிமைகளையும் இழந்து நிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும் போது உள்ளம் கொதிக்கிறது. கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். எனவே, நடிகர் ரஜினிகாந்த் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகத் தமிழர் களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 2009இல் போர் முடிந்து எட்டாண்டுகள் கடந்து விட்ட பிறகும் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச நீதியைக்கூட வழங்க முன்வராத சிங்கள அரசை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வன்மையாக கண்டிக் கிறோம். ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை விடுதலைச் சிறுத்தைகள் களமாடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்