ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அவர் ரஜினிகாந்தை சந்தித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இதற்கிடையே, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை' என்று ரஜினிகாந்த் இன்று ட்விட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில், கங்கை அமரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின் னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, 'ஆர்.கே.நகரில் கங்கை வெற்றி பெற்றால் 100 தாமரைகள் மலரும். மற்ற மாநிலங்களில் பா.ஜ.க பெற்ற வெற் றியின் தாக்கம் இங்கும் தொடரும். பா.ஜ.க. வெற்றி பெற்றால், ஆர்.கே.நகர் மோடியின் நேரடிப் பார்வைக்குச் செல்லும்' என்றார். இதற்கிடையே, ரஜினி யாருக்கும் ஆதரவில்லை என்று கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழிசை, 'ரஜினி கங்கை அம ரனுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதுபோதும். எங்கள் ஹீரோக்கள் மோடி மற்றும் அமித் ஷா தாம்' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்