அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது தி.மு.க-வுக்கு சாதகமில்லை என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள் ளார். சட்டப்பேரவையில் இன்று சபாநாயருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தி.மு.க கொண்டுவந்தது. அதற்கான தீர்மானத்தை எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அவையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார். இதையடுத்து, தீர்மானம் குரல் வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. தீர்மானத்துக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 97 பேரும் வாக்களித்தனர். தி.மு.க கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக நடந்த வாக்கெடுப்பை பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் புறக்கணித் தனர். இதையடுத்து, தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் அறிவித்தார். பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், 'தனக்கு ஆதரவு மற்றும் எதிராக வாக்களித்தவர்களுக்கு சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்துள்ளார். பேரவையில் இனி அனைவரது நம்பிக்கையையும் பெறும்படி பணியாற்றுவேன் என சபாநாயகர் கூறியுள்ளார். அ.தி.மு.க-வின் சின்னம் முடக்கப்பட்டது, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதில் தி.மு.க. தலையிடாது. இரட்டை இலைச் சின்னம் முடக் கப்பட்டதால் தி.மு.க.வுக்கு சாதகம் எனக்கூறுவது தவறான கருத்து. அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்துடன் நின்றபோதும், தி.மு.க அவர்களை பல தேர்தல்களில் வீழ்த்தியுள்ளது' என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்