எந்திரன் 2.0 படப்பிடிப்புத் தளத்தில் பத்திரிகையாளரைத் தாக்கிய விவகாரத்தில், படத்தின் உதவி இயக்குநர் பப்பு கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில், இன்று எந்திரன் 2.0 படப்பிடிப்பு நடந்தது. அப்போது, அதைப் படம் எடுக்க, நாளிதழ் ஒன்றின் புகைப்படக் கலைஞர் முயன்றார். இதையடுத்து ,அவரை 2.0 படக்குழுவினர் தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித் தனர். இந்தப் புகாரின் பேரில் 2.0 படத்தின் உதவி இயக்குநர் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், இயக்குநர் ஷங்கரின் உறவினர் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, 2.0 படத்துக்கு காலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து, 2.0 படக் குழுவினர், செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிக்க உள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்