ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். இது தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் ஆர்.கே.நகரில் நடந்த கூட்டத்தில் தீபாவுடன் இதில் மாதவனும் பங்கேற்றார். இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன், திடீரென தீபாவின் அமைப்பில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெய லலிதா சமாதிக்கு சென்று வணங்கிய அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். தீபா தொடங்கியி ருப்பது அமைப்பு, நான் தொடங்க இருப்பது கட்சி என்று விளக்கம் அளித்த மாதவன், தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்து விட்டதாகவும் குற்றச்சாட்டுகளை கூறினார். கணவர் மாதவனின் தனிக்கட்சி அறிவிப்பால் தீபா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். நேற்று இரவு மாதவன் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்ட பின்னர் தீபா பேரவை நிர்வாகிகளுடன் தீபா தனது வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 9 பேர் கொண்ட பணிக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அக் குழுவினருடனும் தீபா ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் பேசிய தீபா கணவர் மாதவனின் நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கோபமாக பேசி யுள்ளார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற போவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளம் வாக் காளர்கள் மத்தியில் கட்சிக்கு செல்வாக்கு அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்