சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஜெனிவாவில், மார்ச் 22-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. 2009-ம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, அந்நாட்டு அரசு மேலும் 18 மாத காலம் அவகாசம் கேட்க உள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரிக்கும் என்று தெரிகிறது. ஏற்கெனவே, இலங்கையில் நடைபெற்ற போர் குறித்து சர்வதேச விசாரணை கோரி வந்ததை இலங்கை மறுத்துவரும் நிலையில், தற்போது உள்நாட்டு விசாரணையையும் தாமதப்படுத்திவருகிறது. இதைக் கண்டித்து, வைகோ சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, 'ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா மாநாட்டில், இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்படக்கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட, ம.தி.மு.க-வினரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்