கலைமாமணி பட்டம் பெற்றவரும், பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா (65) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 65. கொஞ்சும் குமாரி படத்தின் மூலம் 1963ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானவர் கேஆர் இந்திரா. இதே படத்தில்தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுக மானார். எம்.ஜி.ஆர். நடித்த பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தின் நம்பியாருக்கு ஜோடியாகவும், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்ற படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். கந்தன் கருணை, ரஜினிகாந்தின் மன்னன், சிந்து பைரவி, பணக்காரன் உள்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நடித்த படம் கிரிவலம். இதில் நடிகர் ரிச்சர்டின் பாட்டியாக நடித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த இந்திராவுக்கு ஏற்கெனவே மூட்டு வலி இருந்த நிலையில் திடீரென்று மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். கே.ஆர்.இந்திராவின் தந்தை கே.எஸ்.ராமசாமி பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த கே.ஆர்.இந்திரா மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் உள்பட பலர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்