ஜெயலலிதாவால் 2011 பொதுச்தேர்தலுக்குப்பின் கூட்டணியில் இருந்து விரட்டப்பட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரை தற்போது நடை பெறவுள்ள ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு டிடிவி.தினகரன் கேட்டுள்ளார். ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக, சசிகலா தரப்பு அதிமுக, திமுக, தேமுதிக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை ஆகியோர் போட்டியிட உள்ளனர். சசிகலா தரப்பு அதிமுகவுக்கு பெரும் சவாலாக உள்ள இந்தத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தலில் மதிமுக, பாஜக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி உள்ளிட்டக் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேதிமுக 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததது. அந்தத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆளும் கட்சியாக பதவியேற்றது. அதைத்தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்த தேமுதிக பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிமுக உறுப்பினர்களும் தேமுதிக உறுப்பினர்களும் சட்டசபையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விஜயகாந்த் வேட்டியை மடித்துக்கட்டி நாக்கை துருத்தி பல்லைக்கடித்ததெல்லாம் தனிக்கதை. இன்று வரை இரண்டு கட்சிகளும் கீரியும் பாம்புமாக உள்ளன. இந்நிலையில் ஜெ. மறைவுக்குப் பிறகு கட்சியை கைப்பற்றிய சசிகலா குடும்பத்தினர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த தினகரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பேசிய தினகரன், ஜெயல லிதாவால் விரட்டப்பட்ட விஜயகாந்தை இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஏற்கனவே ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு கெல்லாம் தங்களின் மறைமுக ஆட்சி மூலம் ஒப்புதல் தெரிவித்து வரும் சசிகலா குடும்பம் தற்போது ஜெயலலிதா எதிர்த்தவர்களையெல்லாம் கூட்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்