சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றி பெற்றாலும், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியில் தொடருவார் என்று அத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள டி.டி.வி.தினகரன் இன்று தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிட உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியானதுமே, முதல்வர் பதவியை பெறுவதற்காகவே அவர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறார் என்ற பேச்சு எழுந்தது. இதுகுறித்து நிருபர்கள் தினகரனிடம் கேள்வி எழுப்பினர். ஆட்சிமன்ற குழுவின் முடிவால் நான் ஆர்.கே.நகரில் போட்டியிட உள்ளேன் என்றார். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால், நீங்கள் முதல்வராகும் வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "முதல்வராகவும் வாய்ப்பு நிச்சயம் இல்லை. அந்த காலகட்டத்தில் இருந்த முதல்வர் நடவடிக்கையால், மூத்த அமைச் சர்களும், கட்சியின் நிர்வாகமும், ஒரே இடத்தில் இருந்தால்தான் நியாயமாக இருக்கும் என கூறினர். அன்பு சகோதரர் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியின், செயல்பாடு அனைவராலும் பாராட்டப்படுகிறது. அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்பதை நான் வலியுறுத்தி கூறிக் கொள்கிறேன் என்றார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்