img
img

நீங்கதான் இந்த உலகத்தை காக்க வந்தவரோ?
ஞாயிறு 12 மார்ச் 2017 14:04:26

img

சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, விஷால் மோதலையடுத்து, இயக்குநர் சேரனும் இப்போது களத்துக்கு வந்திருக்கிறார். நடிகர் சங்கப் பொதுச் செயலாளரான நடிகர் விஷாலை கண்டித்து அவர் கொடுத்துள்ள மிக நீளமான அறிக்கைக் கடிதம்தான் கோலிவுட் வட்டாரத்தில் இரவு நேர தீயை மூட்டி யுள்ளது. சினிமா படத் தயாரிப்பாளர் சங்கம் குறித்து நடிகர் விஷால் அவதூறாக பேசியதாக கூறி நடிகர் சங்கத்தை, கடந்த 6-ம் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் தயாரிப்பாளர்கள் முற்றுகையிட்டனர். அடுத்தகட்டமாக தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷாலை இடைக்காலமாக நீக்கியும் அறிவிப்பு செய்தனர். இதன்பின்னர் விஷால் மன்னிப்புக் கடிதம் கொடுத்து, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். "நடிகர் பிரகாஷ் ராஜ் பிரிவினையை தூண்டுகிறார், விஷாலை விட்டு நாசர் விலக வேண் டும். விஷாலால் நாசருக்கு அவப்பெயர் தான் ஏற்படும்" என்று முற்றுகையின் போது பேசிய அப்போது கலைப்புலி தாணு குறிப்பிட்டார். இந்த நிலையில் இயக்குநர் சேரனும் இப்போது விஷாலை கண்டித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சேரன் எழுதியுள்ள கடிதத்தின் சுருக்கம்.. "என்ன ஆச்சு உங்களுக்கு நல்லாத்தானே இருந்தீங்க... என்ன பேசறோம், என்ன செய்யறோம்னு தெரியாத அளவுக்கு ஆகிப்போனீங்களே ஏன்? நீங்க பேசறதையெல்லாம் மீடியாக்கள் காட்றாங்கனு என்னமோ நீங்கதான் இந்த உலகத்தை காக்க வந்த ஆபத்பாந்தவனா நினைச்சுக்கிட்டு பேசற பேச்சு செய்ற செயல் எல்லோரையும் எப்படியெல்லாம் காயப்படுத்துதுனு தெரியுமா? ஒரே ஒரு பதவிதான்... நடிகர் சங்க பொதுச்செயலாளர். வெறும் மூவாயிரம் உறுப்பினர்களுக்குள்ள நடந்த தேர்தல்ல ஜெயித்தவர் நீங்க. அதுவும் திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் உங்களை ஜெயிக்க வைக்க என்னவெல்லாம் செய்தார். உங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் எப்படி கிடைத்ததுனு இப்ப ரித்தீஷ் அவர்களை பேச சொல்லலாமா? அந்த பதவிக்கு வந்தது தவிர நீங்கள் சாதித்தது என்ன? நீங்க நடிச்ச படங்கள்ல கூட ஒரே ஒரு படம் இந்த உலகத்துக்கும் மக்களுக்கும் பயன்படுற மாதிரி சிறப்பான படம் நடிச்சேன்னு சொல்ல முடியுமா? மக்களின் மூளையை மழுங்கடிக்கிற, இன்னும் ஆதிகால சினிமா போல இறங்கி டப்பாங்குத்து ஆடிக்கிட்டு இருக்குற படங்கள் பண்ற உங்களுக்கெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச என்ன தகுதி உள்ளது. இதை புகழ்போதைன்னு கூட சொல்ல முடியாது. ஒருவகையான வியாதி. ஒரு நல்ல மருத்துவரைப் பார்ப்பது நல்லது. நடிகர் சங்கத்துல இருக்குற வேலைகளையே செய்து முடிக்காத நீங்க எதற்காக தயாரிப்பாளர் சங்கத்துலயும் நான் தான் வரணும்னு நினைக்கிறீங்கன்னு தெரியலை." "அப்புறம்..கமல் சாருக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன்னு பேட்டி வேற... என்ன திமிர் உங்களுக்கு, என்ன ஆணவம். கமல் சாருக்கு நீங்க யாருங்க? அவருக்கு ஒன்னுனா இந்த உலகம் முழுவதும் கோடானுகோடி ரசிகர்கள் இருக்காங்க அத பாத்துக்க... அவர் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. அவரை நீங்க கூட நின்னு காப்பாத்தற அளவுக்கு அவர் புகழும், தகுதியும் குறைந்தது இல்லை. பித்து தலைக்கேறிய பேச்சு அது. விஸ்வரூபம் திரைப்படப் பிரச்சனை அப்போ நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீங்க! சரி விடுங்க... அது உங்களுக்கு புரியாது., சொன்னா புரிஞ்சுக்கற இடத்துலயும் நீங்க இல்ல. இன்னும் என்னென்ன கண்றாவி காட்சிகளை தமிழர்களா பொறந்த பாவத்துக்கு நாங்க பாத்து தொலைக்கணுமோ பாக்குறோம்... நன்றி உங்கள் கருணைக்கு..." மரியாதையுடன், சேரன். இப்படி முடிந்திருக்கிறது இரவில் வந்த இந்த கடிதம். விடிந்ததும், விஷால் என்ன சொல்லப் போகிறாரோ!?

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img