செவ்வாய் 10, டிசம்பர் 2024  
img
img

இலங்கை என்று ஒரு நாடு உள்ளதா?
சனி 18 பிப்ரவரி 2017 15:00:38

img

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் தொடர்பு கொள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது. டொனால்ட் ட்ரம்பிற்கு தொலைப்பேசி ஊடாக வாழ்த்து தெரிவிப்பதற்கு மஹிந்த கடந்த பல வாரங்களாக முயற்சித்து வருகிறார். எனினும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அரசாங்கத்துடன் நெருங்கி செயற்பட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரை சந்திக்க முயற்சிகளை மேற் கொண்டுள்ளார். அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் வழங்கிய ஆலோசனைக்கமைய மஹிந்தவின் அலு வலக பிரதானி ஒருவர் டொனால்ட் ட்ரம்பின் பணிப்பாளர் சபை பிரதானிக்கு அழைப்பை ஏற்படுத்தி யுள்ளார். இதன்போது அமெரிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு இணைக்குமாறு கோரியுள்ள போதிலும், முன்னாள் ஜனாதிப திக்கு அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்படாதென அழைப்பை துண்டித்துள்ளார். தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்பின் பணிப்பாளர் சபை பிரதானிக்கு இலங்கை என்று ஒரு நாடு உள்ளதென்பதே தெரியாதென்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும் என இந்த தகவலை வழங் கிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img