கோலாலம்பூர், ஜன. 18-
பி.டி.பி.டி.என். என்ற தேசிய கல்விக்கடனுதவி கழகத்தின் சிறப்பு குலுக்கல் பிரச்சாரத்தை உயர்கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அப்துல் ரசாக் பின் ஜப்பார் அண்மையில் தொடக்கி வைத்தார். இம்பியானா கோலாலம்பூர் சிட்டி செண்டர் தங்கு விடுதியில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பி.டி.பி.டி.என். அதிகாரத்துவ முகநூல் மூலம் நேரலை ஒளிபரப்பு கண்டது. பி.டி.பி.டி.என். டிவி அதிகாரத்துவ யுடியூப் வாயிலாகவும் ஒளிபரப்பு கண்டது.
ழ்ச்சியின் போது பி.டி.பி.டி.என். தலைமை செயல்முறை அதிகாரி அகமட் டசுக்கி அப்துல் மாஜிட், உயர்கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள், பி.டி.பி.டி.என். நிர்வாகிகளும் உடன் இருந்தனர். உயர்கல்வி நோக்கத்திற்காக பி.டி.பி.டி.என். எப்போதுமே சேமிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறது. Simpan SSPN என்ற கல்வி சேமிப்பு உற்பத்தி பொருள் என்பது 2021-2025 பி.டி.பி.டி.என். வியூகமான திட்டத்திற்கு ஏற்ற வகையில் இத்தகைய முயற்சி அமைந்துள்ளது. எனவே அதிர்ஷ்டக் குலுக்கல் இயக்கம் என்பது வருடாந்திர பிரச்சார மேம்பாட்டு இயக்கம். சேமிப்பை ஊக்குவிப்பதற்காக இத்தகைய இயக்கம் இவ்வாண்டிலும் தொடர்கிறது.
எஸ்எஸ்பிஎன் என்ற கல்வி சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாக இது விளங்குகிறது.
* Simpan SSPN 2023 என்ற சிறப்பு அதிர்ஷ்டக் குலுக்கல் திட்டமானது ரொக்கப் பணத்தை வெகுமதியாக வழங்குகிறது. இதன் ஆக மொத்த பண மதிப்பு ஏறத்தாழ 5 லட்சம் என்று தெரிவிக்கப்படுகிறது. 138 வெற்றியாளர்களுக்காக காத்திருக்கும் ரொக்கத் தொகை இது. இம்முறை அதிர்ஷ்டக் குலுக்கல் என்பது வருடாந்திரமான ஒன்று. அதோடு ஐந்து முறை அதிர்ஷ்டக் குலுக்கல் அடுக்கடுக்காக அமைந்துள்ளது.
* Wow Gong Xi Ang Pau குலுக்கல் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெறும். Wow! Syoknya Raya என்ற குலுக்கல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நடைபெறும். Wow Merdeka குலுக்கல் 2023ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை நடைபெறும். Wow Super heroes என்பது இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை நடைபெறும். Wow Y.E.S. 2023 என்ற குலுக்கல் இவ்வாண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த குலுக்கல் பிரச்சார இயக்கத்தின் போது முதலீட்டாளர்கள் சேமிப்புக் கணக்கை திறக்க வேண்டும் என்பதுதான் அல்லது இக்கால கட்டத்தின்போது சேமிப்பின் அளவை அதிகரித்துக் கொள்வதுதான். இந்த பிரச்சார காலகட்டத்தின்போது Simpan SSPN Prime திட்டத்தில் ஒவ்வொரு 100 வெள்ளி சேமிப்புக்கு ஒரு குலுக்கல் தகுதி உண்டு. Simpan SSPN Plus என்ற திட்டத்தில் 50 வெள்ளி சேமிப்பிற்கு இயல்பாகவே இரண்டு குலுக்கல் வாய்ப்பினை பெறும் பெறுவர்.
Mobile app myPTPTN என்ற செயலியை பயன்படுத்துவோருக்கு இந்த முறை பிரச்சார இயக்கம் அதிக குலுக்கல் வாய்ப்புகளை வழங்குகிறது. myPTPTN வாயிலாக Simpan SSPN Prime என்ற திட்டத்தில் 100 வெள்ளி சேமிப்பு வைப்பவர்கள் 5 குலுக்கல் வாய்ப்புகளை பெறுவர். அதே நேரத்தில் myPTPTN வாயிலாக Simpan SSPN Plus திட்டத்தில் 50 வெள்ளி சேமிப்பு வைப்பவர்களுக்கு 10 குலுக்கல் வாய்ப்புகள் கிட்டும்.
உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் ஓர் ஏஜென்சியான பி..டி.பி.டி.என். சேமிப்பு கலாச்சாரத்தை பேணி வருகிறது. Simpan SSPN என்ற சேமிப்பு வழிமுறையினை இது 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. Simpan SSPN என்ற சேமிப்புத் திட்டம் வலுவான தளத்தில் இயங்கி வருகிறது. சந்தையில் இதர வகை சேமிப்புத் திட்டங்களோடு இது வெற்றிகரமாக போட்டியிடுகிறது. நிதி திட்டமிடுதல் வழி மலேசிய சமுதாயம் நன்மை அடையும் வகையில் பி.டி.பி.டி.என். முன்முயற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில் Simpan SSPN திட்டத்தில் வரவு வைக்கப்பட்ட தொகை வெ. 14.24 பில்லியன். சேமிப்புக் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை 5.73 மில்லியன். myPTPTN கைப்பேசி செயலியை பயன்படுத்தி எளிதாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் Simpan SSPN சேமிப்புத் திட்டத்தில் கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்